தண்ணீரில் சார்ஜ் செய்யப்படும் தொலைபேசிகள்

Samsung நிறுவனம் புதியவகைக் கைத்தொலைபேசிகளைத் தயாரித்துள்ளது.

இத் தொலைபேசிகள் சிறப்பு யாதெனில், இவற்றின் பற்றரிகளைத் தண்ணீரில் புதுப்பித்துக் கொள்ள முடியும். இத்தகைய தொலைபேசிகளை 2010ல் சந்தைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தண்ணீரில் சார்ஜ் செய்யப்படும் இத்தகைய தொலைபேசிகள் தொடர்ச்சியாகப் பத்துமணிநேரம் வரை பாவிக்க முடியுமென , இதன் தயாரிப்பபாளர்களான சம்சுங் நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். இத்தகைய தொலைபேசிகள் பாவனைக்கு வந்துவிட்டால், தவறித் தண்ணீரில் விழுத்த தொலைபேசியை பதறியடித்துத் தூக்க வேண்டியிராது.

விண்டோஸ் 7 - கணினி திரையை தொட்டு இயக்கலாம்

மைக்கிரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 என்னும் இயங்கு தளத்தை தொடுதிரை வசதியுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் படி கணினி திரையை தொட்டு இயக்கலாம்.
கணினியின் ஒரு பகுதியில் உள்ள தகவலை வேறொரு பகுதிக்கு நகர்த்துவதற்கு எமது கை விரலினால் அவற்றை தொட்டு இலகுவாக நகர்த்தலாம். இதற்கு விசைபலகையினதோ அல்லது சுட்டெலியினதோ உதவி தேவையேயில்லை.

வைகைப்புயலின் வேகம்... தயாரிப்பாளர்கள் சோகம்!

வரப்போகும் புத்தாண்டு வடிவேலுவுக்கு இடி கொடுக்கும் போலிருக்கிறது. தினந்தோறும் 7 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர் ஒரேயடியாக 9 லட்சமாக உயர்த்திவிட்டாராம். அதிர்ந்து போயிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அதையும் தர தயாராக இருக்கிற சிலருக்கும், வடிவேலுவின் தினப்படி ஷெட்யூல், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே அதை மட்டுமாவது சீரமைக்கும்படி கேட்கிறார்களாம். காலை 11 மணிக்கு படப்பிடிப்புக்கு வரும் வடிவேலு, சரியாக ஒரு மணிக்கு லஞ்ச் பெல் அடித்துவிடுவாராம். அதன் பின் ஸ்பாட்டுக்கு வருவது 3 மணிக்குதானாம். மாலை ஆறு மணிக்கெல்லாம் இவருக்கு பேக்கப் சொல்லிவிட வேண்டும். சொல்லாவிட்டாலும், காரில் ஏறி போய் கொண்டேயிருப்பாராம். இந்த கால நேரத்தை கொஞ்சம் மாற்றிக் கொண்டாலாவது பரவாயில்லை என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

எதற்கும் சம்மதிக்காத வடிவேலு தனது பிடிவாதத்தை தளர்த்த மறுப்பதால், வைகைப்புயலின் வாசல் படி மிதிக்கவே அஞ்சுகிறது திரையுலகம். விளைவு...? வில்லுவை தவிர வேறு படங்கள் எதுவும் கையில் இல்லை அண்ணாச்சிக்கு. சும்மாதானே இருக்கிறோம் என்று நினைத்திருப்பார் போல... சொந்த ஊருக்கு பிள்ளை குட்டிகளோடு போயிருக்கிறாராம்.

ஒருவேளை அரசியல் ஆசை பிடித்து ஆட்டுகிறதோ என்னவோ?

மீசையில்லா ரஜினி

அதிக பரபரப்பில்லாத பரந்தவெளி படப்பிடிப்புக்கு பலரும் தேடிச் செல்லும் இடமாகி வருகிறது, வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (விஐடி). சமீபத்தில் குகன் தனது இனிது இனிது படத்தின் படப்பிடிப்பை இங்கு நடத்தினார். தெலுங்கு கேம்பஸ் படத்தின் ரீ-மேக்கான இனிது இனிது கல்லூரி கதை என்பதால் விஐடி-யை தேர்வு செய்திருந்தார் குகன்.

ஷ­ங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகிவரும் எந்திரன் படத்தின் படப்பிடிப்பும் இங்கு நடந்தது. இதில் மீசையில்லாமல் நடித்தார் ரஜினி.

ரோபோ ரஜினியை விஞ்ஞானி ரஜினி பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் காட்சி இங்கு எடுக்கப்பட்டது.

மீசையுடன் விஞ்ஞானி ரஜினி நடிக்க, கறுப்பு உடையில் மிரட்டல் தோற்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார் ரோபோ ரஜினி. ஐஸ்வர்யாராய் நடித்த காட்சிகளும் இங்கு படமாக்கப்பட்டது.

பலத்த பாதுகாப்புட‌ன் அங்கு எடுக்கப்பட்ட காட்சிகளின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது எந்திரன் யூனிட்டின் பிபியை எகிற வைத்துள்ளது.

குறைந்தது 6-மணி நேரங்கள் நித்திரை செய்கிறீர்களா,இல்லை என்றால் இதை வாசியுங்கள்

ஒரு வளர்ந்த மனிதன் குறைந்தது 6 மணித்தியாலங்கள் (குழந்தைகள் சிறுவர்கள் 8 தொடக்கம் 10 மணித்தியாலங்கள்) தினமும் நித்திரை செய்ய வேண்டுமாம். அதற்குக் குறைவாக நித்திரை கொள்பவர்களில் அவர்களின் நாடிகள் தடிப்படைந்து பின்னர் குருதிச் சுற்றோட்டம் மற்றும் இதய சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

போதிய நித்திரையின்றி வாழ்பவர்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் 3 இல் ஒருவருக்கு நாடி தடிப்படையும் நிலை அவதானிக்கப்பட்டுள்ளது. இதே போதிய நித்திரை செய்பவர்களில் 10 இல் ஒருவருக்கே அவதானிக்கப்பட்டுள்ளது.

போதிய அளவு நித்திரை இன்மைக்கு மன அழுத்தமும் அதனால் சுரக்கப்படும் (cortisol) எனும் ஓமோனும் நித்திரையின் அளவைக் குறைத்து நாடிகளில் கல்சியம் படிவதை அதிகரித்து நாடியை தடிப்படையச் செய்வதாக சொல்லப்படுகிறது.

எதுஎப்படி இருப்பினும் இவ்வாய்வை மட்டும் வைத்துக் கொண்டு நாடிகளில், இதயத்தில் ஏற்படும் நீண்ட காலப் பாதிப்புக்களுக்கு விளங்கம் தரமுடியாத விட்டாலும் போதிய நித்திரை என்பது குருதிச் சுற்றோட்டம் மற்றும் இதயத்தொழிற்பாட்டை சீராக்க உதவுகின்றன என்பதை ஆணித்தரமாகக் கூற முடியும் என்று ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எனவே வேலை வேலை என்று தூக்கத்தை தொலைக்காது இரவில் போதியளவு (குறைந்தது 6) மணித்தியாலங்கள் தூங்குவதை வழங்கப்படுத்திக் கொள்வது நன்று.

குறிப்பாக பின்னரவு வரை மது அருந்திவிட்டு பின்னர் காலையில் விழித்தெழுபவர்கள் இவ்வாறான பாதிப்புகளுக்கு அதிகம் ஆளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலம்பாட்டத்தில் "சின்ன ரம்பா...."சிம்பு வைத்த செல்லப் பெயராம்

அழியாத வரலாற்றுப் பக்கங்களில் இடம் பிடித்துவிட்டது ரம்பாவின் தொடை! இன்றளவும் இந்த வரலாறை மீற ஒரு நடிகைக்கும் சாமர்த்தியம் இல்லை.

ஆனால், சனாகானிடம் எதைக் கண்டாரோ? ‘சின்ன ரம்பா’ என்றே அழைக்கிறாராம் சிம்பு. அழைத்தால் போதுமா? அதை பதிவு செய்ய வேண்டாமா? சிலம்பாட்டம் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கும் சனாகானை மேலே சொன்ன ‘பட்ட பெயரோடு’ அழைத்து ஒரு பாடலே பாடியிருக்கிறாராம். ‘பம்பாய் இப்போ மும்பையானது. சின்ன ரம்பா இப்போ தெம்பாதான் திரியுது’ என்று தொடங்குகிறதாம் அந்த பாடல். தன்னை ரம்பா என்று அழைப்பதில் ரொம்பவே சந்தோஷப்படுகிறார் சனாகானும். ஒவ்வொரு படத்திலும் தனது அசோக் பில்லர் தொடைகளை காட்ட தயங்கியதே இல்லை ரம்பா. சனாகான் அப்படி ஏதாவது இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறாரா என்பதை சிலம்பாட்டம் வந்த பிறகுதான் முடிவு செய்யவேண்டும்.

சின்ன ரம்பாவுக்கு யூனிட் கொடுக்கும் முன்னுரிமை மற்றொரு நாயகியான சினேகாவுக்கு சின்ன கோபத்தை வரவழைத்திருக்கிறதாம். ஆனாலும், தனது முறை வரட்டும். நடிப்பாலேயே அடிக்கிறேன் என்று சபதம் செய்திருக்கிறாராம். இரண்டு பெண்கள் ஓரிடத்தில் இருந்தால், கலகலப்பும் உண்டு. கைகலப்பும் உண்டு!

தோல்வியில் துவண்ட ஹீரோ!

வெயில் படத்திற்குப் பிறகு பரத்துக்கு பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. படம் ஓரளவுக்கு வெற்றிதான் என்றாலும் பரத்தைவிட பசுபதிதான் அதிகம் பேசப்பட்டார். அதற்குப்பின் திருமுருகன் இயக்கிய எம் மகன் ஓரளவுக்கு ஓடியது. அதற்கடுத்து எந்தப் படமும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. கூடல் நகர், சென்னை காதல், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, தற்போது வெளியான சேவல் வரை வரிசையாக தோல்விப் படங்கள். அதனால் மனம் நொந்தவருக்கு தற்போது ஆறுதல் தரும் படமாகவும், நம்பிக்கை படமான ஆறுமுகத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

சுரேஷ் கிருஷ்ணா இயக்குவதால் மிகவும் தெம்புடன் இருக்கிறார். இருந்தாலும் காதல் படத்தை போல மிகப்பெரிய வெற்றிப்படம் கொடுக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளார். அதற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு ஒரு சில கதைகளை ஓ.கே. பண்ணி வைத்திருக்கிறார். ஆறுமுகம் படம் வெளியானவுடன் அந்தப் படத்தில் நடிக்கவுள்ளார். எப்படிப்பட்ட நடிகராக, இயக்குனராக இருந்தாலும் தற்போதைய ஹிட்தான் பேசப்படும் என்பதை தெளிவோடு புரிந்து வைத்துள்ளார் பரத்.