இறை நம்பிக்கை மூலம் வலிகளிலிருந்து விடுதலை அதிநவீன விஞ்ஞான தொழில்நுட்பம் மூலம் நிரூபிப்பு...!!!

lankasri.comஇறை நம்பிக்கை மூலம் வலிகளிலிருந்து நிவாரணம் பெற முடியும் என்பது விஞ்ஞானபூர்வமாக கண்டறியப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி பரிசோதனையின் பிரகாரம் இறை நம்பிக்கையுடைய 12 றோமன் கத்தோலிக்கர்களுக்கு கன்னி மரியாளின் உருவப் படத்தையும் 12 நாஸ்திகர்களுக்கு அவர்கள் லியோனார்டோ டாவின்சியின் 13 ஆம் நூற்றாண்டுப் படத்தையும் வழங்கி, அவர்கள் அதனைப் பார்த்துக் கொண்டிருக்கையில் மின் அதிர்ச்சி கொடுக்கப்பட்டது.

இதன்போது மேற்படி மின் அதிர்ச்சியால் இறை நம்பிக்கையுடைய கத்தோலிக்கர்கள் பெரிதாக வலியை அனுபவம் செய்யவில்லை என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் மன விஞ்ஞான நிலைய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இப் பரிசோதனைக்காக பிந்திய மூளை இயக்க மதிப்பீட்டு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மின் அதிர்ச்சியின்போது இறை நம்பிக்கையுடையவர்களின் வலிகளை உணரும் மூளையின் பகுதி இயல்பு நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையின்போது, பங்கேற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் அரை மணித்தியால நேரத்தில் 20 மின் அதிர்ச்சிகள் வீதம் வழங்கப்பட்டது.

செல்லிடத் தொலைபேசியால் தோல் நோய் ஏற்படுகிறது.

http://www.w3.org/2006/Talks/1106-sb-OneWeb-Mobile2/manycallers-mobilepic.jpg

செல்லிடத் தொலைபேசி (Mobile phone) பாவனையாளர்கள் மத்தியில் குறித்த ஒரு தோல் வியாதி (skin rash) அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செல்லிடத் தொலைபேசிகளில் நிக்கல் உலோகம் பாவிக்கப்படுவதும் அது செல்லிடத் தொலைபேசிகளை பாவிக்கும் பாவனையாளரின் முகம்,காது உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோலுடன் நீண்ட காலத்துக்கு தொடுகையில் இருக்க நேர்வதாலும் இவ் ஒவ்வாமை சார்ந்த பாதிப்பு உருவாவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் செல்லிடத் தொலைபேசிகளின் வெளிப்புற கவசம் மற்றும் பொத்தான்களில் நிக்கல் உலோகம் பாவிக்கப்படாத செல்லிடத் தொலைபேசிகளைப் பாவிப்பதால் இப்பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

பொதுவாக பெண்கள் மத்தியில் நிக்கல் உலோக ஒவ்வாமையின் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. காரணம் அவர்கள் அணியும் ஆடம்பர ஆபரணங்களிலும் நிக்கல் படலமிடப்பட்டிருப்பதே ஆகும்.

அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம்!

பகலில் நாம் சுறுசுறுப்பாக வேலைபார்ப்பதை இரவு தூக்கம் தான் தீர்மானிக்கிறது.சரியான தூக்கம் இல்லை என்னும் போது நமது அன்றாட பணிகள் பாதிப்படைகின்றன.சராசரியாக ஒருநாளைக்கு ஏழரை மணி நேரமாவது தூங்க வேண்டும்.எனினும் இந்த அளவு நபருக்கு நபர் மாறுபடுகிறது.

பொதுவாக இந்தியர்கள் நள்ளிரவுக்கு பின் தான் தூங்கச்செல்கின்றனர். 61 சதவீதம் பேருக்கு 7மணிநேர தூக்கம் கூட இல்லை.பெரும் பாலும் தூக்கமின்மைக்கு காரணமாக கூறப்படுவது பணிச்சுமையே. பி.பி.ஓ.,நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் சரியான நேரத்துக்கு தூங்கச்செல்வதில்லை. இரவில் "டிவி" பார்ப்பதால் பலருக்கு படுக்கைக்கு சென்ற பின்னரும் தூக்கம் வருவதில்லை.

நோய் எதிர்ப்புசக்தியை அதிகரித்துக்கொள்ள முடியாது:உடல்நலத்தை பாதுகாப்பதில் தூக்கம் முக்கிய பங்காற்றுகிறது.தூக்கமின்மையால் இதய நோய்,பக்கவாதம்,உடல் பருமனாதல்,நீரிழிவு நோய்,மன அழுத்தம் போன்றவை வரலாம்.நோய் எதிர்ப்பு செல்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாகின்றன.தூங்கும் போது தான் இவற்றின் உற்பத்தி நடைபெறுகிறது.வைரஸ்,பாக்டீரியா போன்றவற்றின் தாக்குதல்களில் இருந்து மட்டுமின்றி கேன்சரில் இருந்தும் பாதுகாக்க இந்த நோய் எதிர்ப்பு செல்கள் அவசியம்.

குறைவாக தூங்குபவர்கள் அதிகம் உடற் பயிற்சி செய்வதினாலோ,நன்கு சாப்பிடுவதாலோ நோய் எதிர்ப்புசக்தியை அதிகரித்துக்கொள்ள முடியாது.தூக்கமின்றி ஒருநாள் முழுவதுமாக செலவிட்டால் நோய் எதிர்ப்பு செல்களின் எண்ணிக்கை 37சதவீதம் வரை குறைவதாக கண்டறிந்துள்ளனர்.குறைவாக தூங்குபவர்களுக்கு இதயம் தொடர்பான பிரச்னைகள் விரைவில் ஏற்படும்.உடலில் உள்ள சுரப்பிகளையும் இது பாதிக்கிறது.

அடிக்கடி பசியுணர்வை தூண்டுவதால்,அதிகம் சாப்பிட நேரிடுகிறது. உடல் பருமனாவதுடன்,சர்க்கரை நோய்க்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. மூளையில் உள்ள வேதிப்பொருட்கள் சரியாக செயல்படவும்,மன அழுத்தம்,கோபம்,தேவையில்லாத துக்க உணர்ச்சி போன்றவற்றை தடுக்க தூக்கம் அவசியம்.

அமைதியான,இருட்டான சூழலே தூங்குவதற்கு ஏற்றது.

ஒவ்வொரு நாளும் இரவு 10மணிக்கு தூங்கி,காலை 5.30க்கு விழிப்பதை வழக்கமாக கொள்ளவும்.

தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகவே இரவு உணவை முடித்துக்கொள்ளவும்.

தூங்கச் செல்வதற்கு முன் டீ,காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி,தினமும் 4 கி.மீ.,நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக கொள்ளவும். தொடர்ந்து "யோகா" செய்பவர்களுக்கு தூக்கம் நன்றாக வரும்.

தினமும் படுக்கைக்கு செல்வதற்கு முன் புத்தகம்,செய்தித்தாள் படிப்பது,பால் குடிப்பது என ஏதாவது ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

இரண்டு வாரங்களுக்கு மேலாக தூக்கமின்மை பிரச்னை நீடித்தால் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

சுவிஸ், ஜேர்மன், டென்மார்க் நாடுகளில் ஏகன் திரைப்படம் ரத்து!



ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எதிர்வரும் நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொள்ள வேண்டும் என நடிகர்களான அஜீத், அர்ஜுன் நிர்வாகிகளிடம் கேட்டிருந்தனர்.

நேற்று முன்தினம் தமிழ்வின் இணையத்தளத்தில் "ஈழத் தமிழருக்காக ஏன் ஆதரவு வழங்க வேண்டும்" என அஜித் கூறிய இச்செய்தி வெளிவந்த சிலமணி நேரங்களில் உலகத் தமிழர்கள் கொந்தளித்ததுடன், அஜித் நடித்த ஏகன் திரைப்பட இறுவட்டை கொள்வனவு செய்த புலத்தில் வாழும் தமிழ்த் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதனையடுத்து ஜேர்மன், பிரான்ஸ், சுவிஸ் நாடுகளில் புலப்பெயர் தமிழ்மக்கள் 25-10-2008 சனிக்கிழமை அன்று வெளியாகவிருந்த ஏகன் திரைப்படத்தை திரையிடவிடமாட்டோம் என்று ஆர்ப்பரித்ததுடன் நடிகர் அஜித் உண்ணாவிரதத்தில் பங்கேற்க இணக்கம் தெரிவித்திருந்தபோதிலும், சுவிஸ் வாழ் தமிழர்கள் ஏகன் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட அனுமதி வழங்க மறுத்து கொந்தளித்தனர்.

இம்மக்களின் கொந்தளிப்பைக் கண்டு ஏகன் படத்தை விநியோகம் செய்த IMV ஸ்தாபனத்தினர் இத்திரைப்படத்தை திரையிடமாட்டோம் என மக்களுக்கு உறுதிமொழி அளித்து அத்திரைப்படத்தை ரத்து செய்ததோடு மக்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக சுவிஸ் திரையரங்குகளில் ஏகன் திரைப்படத்தை வெளியிட இருந்தவரான, கஜன் என்பவரை தமிழ்வின் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் இணையத்தளத்திற்கு கூறியதாவது"

"ஈழத்தமிழருக்கு ஆதரவு வழங்கி, நடிகர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க மறுத்த நடிகர் அஜித் நடித்த ஏகன் திரைப்படத்தை வெளியீடு செய்யக்கூடாது என சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் கொந்தளித்ததை அடுத்தே இவ்வாறு முடிவு செய்துள்ளோம்" எனக் கூறினார்.

இதேவேளை, ஜேர்மன் டென்மார்க் போன்ற நாடுகளிலும் தமிழ்மக்களின் கொந்தழிப்பை தொடர்ந்து, ஏகன் திரைப்படத்தை திரையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழர்களை கூண்டோடு அழிக்கும் சதியில் இந்திய அரசுக்கும் பங்குண்டு...!

இலங்கைக்கு தொடர்ச்சியாக இராணுவ உதவிகள் வழங்கப்படும் என இந்திய மத்திய அரசாங்கத்தின் சார்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளாரென திவயின ஞாயிறு இதழ் பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் யுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பலைகளைப் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக இராணுவ ரீதியான உதவிகள் வழங்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது.

இராணுவ உதவிகள் நிறுத்தப்படாதென மத்திய அரசு, தமிழக மாநில அரசிற்கும் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஓர் அங்கமாக தொடர்ச்சியாக இலங்கைப் படையினருக்கு இராணுவப் பயிற்சிகள் வழங்கப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும், இராணுவ உபகரணங்களை இந்தியாவிடமிருந்து இலங்கை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நாங்கள் இலங்கைக்கு இராணுவ உதவி அளிக்காவிட்டால் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இப்பிராந்தியத்தில் காலூன்ற அது வழிவகுத்துவிடும். எனவே உங்கள் பாதுகாப்புத் தேவைகளுக்கு எங்கும் அலையவேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் இருக்கின்றோம் என இலங்கைக்கு உறுதியளித்திருக்கின்றோம். எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் கொல்லைப் புறத்திலுள்ள முற்றத்தை சர்வதேச நாடுகளின் விளையாட்டு மைதானமாக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இதன்படி, எதிர்வரும் வருடத்திலும் இந்தியாவின் மீசோரோமில் அமைந்துள்ள கெரில்லா தாக்குதல் பயிற்சி நிறுவகத்தில் இலங்கைப் படைவீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

எடை குறைப்பு மாத்திரைகளால் உயிருக்கு ஆபத்து

lankasri.comநவீன வாழ்க்கை முறை, உணவுப்பழக்க வழக்கம், உடற்பயிற்சி செய்யாதது போன்ற காரணங்களால் எடை அதிகரித்து உடல் குண்டாகிறது. இங்கிலாந்து நாட்டில் மட்டும் 97 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குண்டு உடலை சுமக்க முடியாமல் நடக்கிறார்கள்.

குண்டு உடலை குறைக்க விரும்பும் இவர்கள் கடைகளில் கிடைக்கும் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு எடையை குறைக்கிறார்கள். இது போன்ற உடல் எடை குறைப்பு மாத்திரைகள் அபாயகரமானது என்று இங்கிலாந்து டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

ரிமோனாபென்ட் அல்லது அக்கம்பிளியா போன்ற மாத்திரைகளை பயன் படுத்துகிறவர்களுக்கு மன அழுத்தம், மனநல பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அது மட்டுமல்ல இது போன்ற மாத்திரைகளை பயன்படுத்துகிறவர்களை தற்கொலைக்கும் துண்டிவிட வாய்ப்பு உள்ளது என்றும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

இப்போது அந்த மாத்திரைகளுக்கு டாக்டர்கள் தடை விதித்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய பிக்பேர்ன் (பெருவெடிப்புச் சோதனை) ஆய்வு சுவிஸட்சர்லாந்தில் ஆரம்பம்!




உலகின் மிகவும் சர்ச்சைக்குரிய ஆய்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் பிக்பேர்ன் ஆய்வுப் பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
வரலாறு காணாத வகையில் குறித்த ஆய்வு தொடர்பில் மாறுபட்ட விமர்சனங்கள் குவிந்த வண்ணம் உள்ளன.


உயிரினங்கள் உருவாக்கப்பட்ட விதம் குறித்து ஆராய்வதற்காக நீண்ட சுரங்கமொன்றில் செயற்கையான பிரலயமொன்றை ஏற்படுத்தி அதன் மூலம் ஆய்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இந்த ஆய்வுகள் இடம்பெறுகின்றமையினால் சுவிஸ் மக்கள் மற்றும் ஊடகங்கள் பெரும் பரபரப்பாக காணப்படுகின்றன.

சுமார் 27 கிலோ மீற்றர் நீளமுடைய சுரங்கமொன்றில் அணுசக்தியைப் பயன்படுத்தி பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தி அதன் மூலம் ஏற்படும் மாற்றங்கள் கண்காணிக்கப்படவுள்ளன.

எனினும் இந்த ஆய்வுப் பணிகள் மனித குலத்தின் நிலைப்பாட்டுக்கே பங்கம் ஏற்படுத்தக் கூடும் என ஒரு சில ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எது எவ்வாறாயினும் பாரிய பொருட்செலவில் ஜெனீவா நகரில அமைக்கப்பட்டுள்ள சுரங்கத்தில் குறித்த ஆய்வுகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.



பெருவெடிப்புச் சோதனை BBC

ஸ்விட்சர்லாந்து பிரான்ஸ் எல்லைப்புறத்தின் அடியில், அணு உடைக்கும் கருவி ஒன்றைச்சுற்றி இரு திசைகளிலும், அணுக் கருத்துகள்களைக் கொண்ட கதிர்க்கற்றைகளை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக ஏவியிருக்கிறார்கள்.

பிரபஞ்சம் உருவான விதம் குறித்து மேலும் நன்றாகப் புரிந்துகொள்ளும் முயற்சி தொடங்குவதைக் குறிக்கும் ஒன்றாக இந்த பரிசோதனை அமைகிறது.

இந்த கற்றைகள் சில நேரம் சுழற்றிவிடப்பட்டு பின்னர் மோத வைக்கப்படும்போது, சூரியனை விட பல மடங்கு அதிக வெப்பம் உருவாகும்.

இதன் மூலம், அணுக் கருத்துகள்கள் உருவாகும் என்றும், அதன் மூலம் பிரபஞ்சம் எப்படி ஒன்றாக பிணைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த புதிய அறிவைப் பெறமுடியும் என்றும் இயற்பியலாளர்கள் (பௌதீகவியலாளர்கள்) நம்புகிறார்கள்.

இந்த அணுத்துகள்களின் மோதல்கள் சூரியன் உட்பட அனைத்தையும், அனைத்து சக்திகளையும் அகத்துறிஞ்சிக்கொள்ளும் வல்லமை கொண்ட ஒரு கரும் சூனிய வலயத்தை உருவாக்கக்கூடும் என்றும் அதனால் உலகம் அழியக்கூடும் என்றும் சில வட்டாரங்களிலிருந்து கடுமையான எச்சரிக்கைகள் வந்துள்ளன.