இறை நம்பிக்கை மூலம் வலிகளிலிருந்து விடுதலை அதிநவீன விஞ்ஞான தொழில்நுட்பம் மூலம் நிரூபிப்பு...!!!

lankasri.comஇறை நம்பிக்கை மூலம் வலிகளிலிருந்து நிவாரணம் பெற முடியும் என்பது விஞ்ஞானபூர்வமாக கண்டறியப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி பரிசோதனையின் பிரகாரம் இறை நம்பிக்கையுடைய 12 றோமன் கத்தோலிக்கர்களுக்கு கன்னி மரியாளின் உருவப் படத்தையும் 12 நாஸ்திகர்களுக்கு அவர்கள் லியோனார்டோ டாவின்சியின் 13 ஆம் நூற்றாண்டுப் படத்தையும் வழங்கி, அவர்கள் அதனைப் பார்த்துக் கொண்டிருக்கையில் மின் அதிர்ச்சி கொடுக்கப்பட்டது.

இதன்போது மேற்படி மின் அதிர்ச்சியால் இறை நம்பிக்கையுடைய கத்தோலிக்கர்கள் பெரிதாக வலியை அனுபவம் செய்யவில்லை என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் மன விஞ்ஞான நிலைய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இப் பரிசோதனைக்காக பிந்திய மூளை இயக்க மதிப்பீட்டு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மின் அதிர்ச்சியின்போது இறை நம்பிக்கையுடையவர்களின் வலிகளை உணரும் மூளையின் பகுதி இயல்பு நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையின்போது, பங்கேற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் அரை மணித்தியால நேரத்தில் 20 மின் அதிர்ச்சிகள் வீதம் வழங்கப்பட்டது.

1 comments:

said...

//லியோனார்டோ டாவின்சியின்//

தப்பு பண்ணிட்டாங்க, பாரிஸ் ஹில்டன் அல்லது மடோனா படங்களைத்தான் கொடுத்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் சோதனை வெற்றி பெற்றிருக்கும்