மூளை புற்றுநோய் அபாயம்: செல்போனால் ஆபத்தா?

செல்போனை தொடர்ந்து உபயோகித்தால் மூளையில் புற்று நோய் ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.சுவீடன் நாட்டின் உரிஃப்ரோ நகரில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனை பேராசிரியர் லின்னார்ட் ஹார்டெல் மற்றும் உமியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கிஜில் ஹான்சன் மில்ட் ஆகியோர் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.இவர்களின் ஆராய்ச்சியில், 10 ஆண்டு தொடர்ந்து செல்போன் பயன்படுத்தும் நபர்களுக்கு, மூளை புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு மற்றவர்களை விட 2 மடங்கு அதிகம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.தினசரி ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக செல்போன் பயன்படுத்துபவர்கள், எந்த காதில் செல்போனை வைத்து பேசுகிறார்களோ, அப்பகுதி மூளையில் கட்டி ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.சிறு குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதால் மூளைப்புற்று நோய் வரும் ஆபத்து அதிகளவு இருக்கிறது என தங்கள் ஆய்வில் லின்னார்ட் மற்றும் கிஜில் தெரிவித்துள்ளனர்.

உங்கள் நூலை நீங்களே வெளியிட புதிய ஆன்லைன் வசதி!

ஒரு புத்தகம் எழுதி அதனை வெளியிடுவதற்கு ஏற்படும் கஷ்டங்களும் செலவுகளும் ஏராளம். வெளியீட்டு நிறுவனங்கள் தங்கள் விற்பனைக்கும் வர்த்தகத்திற்கும் உதவும் நூல்களையே வெளியிடுகின்றன. ஆனால் ஒரு சர்ச்சைக்குரிய நூல் அல்லது குறைந்த வாசகர்களே வாசிக்கும் கருத்தாழமிக்க புத்தகங்களை வெளியிட வெளியீட்டு நிறுவனங்கள் அவ்வளவாக முன் வருவதில்லை.இந்த கஷ்டங்களைப் போக்க கோவாவில் உள்ள சின்னமோன்டீல் பிரிண்ட் அண்ட் பப்ளிஷிங் நிறுவனம் (CinnamonTeal Print & Publishing Services) இந்தியாவில் முதல்முறையாக "பிரிண்ட் ஆன் டிமாண்ட்" (POD) என்ற ஆன்லைன் வெளியீட்டு வடிவத்தை துவங்கியுள்ளது.இதன் மூலம் எழுத்தாளர்கள் ஒரு சமயத்தில் தங்களது நூலின் ஒரு பிரதியை இதில் வெளியிடலாம். இதன் மூலம் வெளியீட்டிற்கு ஆகும் செலவுகள் தவிர்க்கப்படுவதோடு சிறிய அளவில் புத்தகங்களை எழுத்தாளர்களே வெளியிட்டுக் கொள்ளலாம்.இதற்கு நீங்கள் செய்யவேண்டியது பெரிதாக ஒன்றும் இல்லை. பூர்த்தியடைந்த உங்கள் பிரதியை இ-மெயில் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ சின்னமோன்டீல் நிறுவனத்திற்கு அனுப்பிவிட வேண்டியதுதான். வெளியீட்டிற்கு முந்தைய தொகுப்பு பணிகள் (Editing), பிழை திருத்தங்கள் (Proof Reading) தேவைப்பட்டால் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு அந்த நிறுவனமே செய்து கொடுக்கும்.நீங்கள் உங்கள் பிரதியை அனுப்பியவுடனேயே Dogearsetc.com என்ற ஆன்லைன் புத்தகக் கடையில் உங்கள் புத்தகம் விற்பனைக்கு கிடைத்து விடும்.எழுத்தாளர்களே தங்கள் புத்தகத்தின் விலையை நிர்ணயிக்கலாம். எந்த ஒரு வாசகராவது உங்கள் எழுத்துகள் பிடித்துப் போய் புத்தகத்தை கேட்டால் அவருக்கு உடனடியாக அச்சு அடிக்கப்பட்டு நன்றாக பைண்ட் செய்யப்பட்டு அனுப்பப்படும். புத்தகத்தின் உள்ளடக்கங்களுக்கான காப்புரிமை ஆசிரியரை சார்ந்ததே.சின்னமோன்டீல்புக்ஸ்.காம் (cinnamontealbooks.com) துவங்கிய லியோனார்ட் மற்றும் கியூனீ ஆகியோர் இது குறித்து கூறுகையில், பல்வேறு மொழிகளும், பண்பாடுகளும் நிரம்பிய இந்தியாவில் குறிப்பிட்ட சிறு வட்ட வாசகர்களுக்கு சென்றடைய இந்த வெளியீட்டு நிறுவனம் பெரிதும் உதவும் என்று கூறினர்.மரபான வெளியீட்டு நிறுவனங்கள், எழுத்துக்கள் வர்த்தகமாக வேண்டும் என்று எதிர்பார்க்கும். பெரிய அளவிற்கு விற்றுத் தீர்த்தாலும், விற்பனை விலையில் ஒரு சிறிய சதவீதத்தை மட்டுமே ஆசிரியருக்கு வழங்குகின்றன.இந்த இடைவெளியை சின்னமோன்டீல் போக்குவதாக அவர் மேலும் தெரிவிக்கையில் கூறினார். இதுவரை இந்த வெளியீட்டு நிறுவனம் சிறப்பான வர்த்தகம் செய்து வந்துள்ளது என்று கூறிய லியோனார்ட், நாவல் போன்ற இலக்கிய புத்தகங்களை இதுவரை யாரும் கேட்கவில்லை. தற்போது என்.ஜி.ஓ மற்றும் கல்வி நிலையங்கள் சார்ந்த பத்திரிக்கைகள் மற்றும் செய்திக் கடிதங்கள் (News Letters) ஆகியவற்றிற்கான திட்டங்கள் மட்டும் முழு மூச்சுடன் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.இதுபோன்ற புதுவகை ஆன்லைன் பப்ளிஷிங் இந்தியாவிற்கு புதிது. ஆனால் வெளிநாடுகளில் லுலு.காம் (Lulu.com) இந்த வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் செய்து வருகிறது. ஆனால் இந்தியா போன்ற பல்வேறு மொழிக் கலாச்சாரங்கள் உள்ள நாட்டில் சிறுபான்மையினருக்கும் சென்றடையுக்கூடிய இத்தகைய ஆன்லைன் வெளியீட்டு நிறுவனங்களுக்கு வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிவேக அகண்ட அலைவரிசை தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு!


ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜான் பப்பன்டிரியோ பவுலோஸ் என்பவர் 100 எம்பிபிஎஸ் (ஆடிpள) திறனுடைய அகண்ட அலைவரிசை வசதியை உருவாக்குவதற்கான தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளார்.
உலகளவில் தற்போது அதிகபட்சமாக 20 எம்பிபிஎஸ் தரம் உடைய அகண்ட அலைவரிசை மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும்இ தான் கண்டுபிடித்துள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தகவல் இழப்பை தடுப்பதன் மூலம் 100 எம்பிபிஎஸ் திறனுடைய அகண்ட அலைவரிசை வசதி சாத்தியமாகும் என்றும் ஜான் பப்பன்டிரியோ பவுலோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது அகண்ட் அலைவரிசை தொழில்நுட்பங்களின் வேகம் அதிகபட்சமாக 8 எம்பிபிஎஸ் வரை மட்டுமே உள்ள நிலையில்இ இந்த தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தால் இணையம் மூலம் தகவல் பரிமாறிக் கொள்ளும் துறைகள் பெரும் வளர்ச்சி அடையும் என தொலைத்தொடர்புத் துறை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.