குறைந்தது 6-மணி நேரங்கள் நித்திரை செய்கிறீர்களா,இல்லை என்றால் இதை வாசியுங்கள்

ஒரு வளர்ந்த மனிதன் குறைந்தது 6 மணித்தியாலங்கள் (குழந்தைகள் சிறுவர்கள் 8 தொடக்கம் 10 மணித்தியாலங்கள்) தினமும் நித்திரை செய்ய வேண்டுமாம். அதற்குக் குறைவாக நித்திரை கொள்பவர்களில் அவர்களின் நாடிகள் தடிப்படைந்து பின்னர் குருதிச் சுற்றோட்டம் மற்றும் இதய சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

போதிய நித்திரையின்றி வாழ்பவர்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் 3 இல் ஒருவருக்கு நாடி தடிப்படையும் நிலை அவதானிக்கப்பட்டுள்ளது. இதே போதிய நித்திரை செய்பவர்களில் 10 இல் ஒருவருக்கே அவதானிக்கப்பட்டுள்ளது.

போதிய அளவு நித்திரை இன்மைக்கு மன அழுத்தமும் அதனால் சுரக்கப்படும் (cortisol) எனும் ஓமோனும் நித்திரையின் அளவைக் குறைத்து நாடிகளில் கல்சியம் படிவதை அதிகரித்து நாடியை தடிப்படையச் செய்வதாக சொல்லப்படுகிறது.

எதுஎப்படி இருப்பினும் இவ்வாய்வை மட்டும் வைத்துக் கொண்டு நாடிகளில், இதயத்தில் ஏற்படும் நீண்ட காலப் பாதிப்புக்களுக்கு விளங்கம் தரமுடியாத விட்டாலும் போதிய நித்திரை என்பது குருதிச் சுற்றோட்டம் மற்றும் இதயத்தொழிற்பாட்டை சீராக்க உதவுகின்றன என்பதை ஆணித்தரமாகக் கூற முடியும் என்று ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எனவே வேலை வேலை என்று தூக்கத்தை தொலைக்காது இரவில் போதியளவு (குறைந்தது 6) மணித்தியாலங்கள் தூங்குவதை வழங்கப்படுத்திக் கொள்வது நன்று.

குறிப்பாக பின்னரவு வரை மது அருந்திவிட்டு பின்னர் காலையில் விழித்தெழுபவர்கள் இவ்வாறான பாதிப்புகளுக்கு அதிகம் ஆளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 comments:

said...

Very Good. Last Para is important for the Bachelors?..

said...

தூங்க வேண்டும் - அவ்வளவுதானே ! தூங்கிட்டாப் போச்சு !!

said...

//தூங்க வேண்டும் - அவ்வளவுதானே ! தூங்கிட்டாப் போச்சு !!//

ரைட்டேய்!

ஹாஆஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!