அதிவேக அகண்ட அலைவரிசை தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு!


ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜான் பப்பன்டிரியோ பவுலோஸ் என்பவர் 100 எம்பிபிஎஸ் (ஆடிpள) திறனுடைய அகண்ட அலைவரிசை வசதியை உருவாக்குவதற்கான தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளார்.
உலகளவில் தற்போது அதிகபட்சமாக 20 எம்பிபிஎஸ் தரம் உடைய அகண்ட அலைவரிசை மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும்இ தான் கண்டுபிடித்துள்ள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தகவல் இழப்பை தடுப்பதன் மூலம் 100 எம்பிபிஎஸ் திறனுடைய அகண்ட அலைவரிசை வசதி சாத்தியமாகும் என்றும் ஜான் பப்பன்டிரியோ பவுலோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது அகண்ட் அலைவரிசை தொழில்நுட்பங்களின் வேகம் அதிகபட்சமாக 8 எம்பிபிஎஸ் வரை மட்டுமே உள்ள நிலையில்இ இந்த தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தால் இணையம் மூலம் தகவல் பரிமாறிக் கொள்ளும் துறைகள் பெரும் வளர்ச்சி அடையும் என தொலைத்தொடர்புத் துறை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

1 comments:

said...

இந்தியாவில் இன்னும் wifi பரவலாக காணப்படுவதில்லை அதற்குள் இதுவா?
இன்னும் 10 வருடங்கள் ஆகும் என்று நினைக்கிறேன்.