மூளை புற்றுநோய் அபாயம்: செல்போனால் ஆபத்தா?

செல்போனை தொடர்ந்து உபயோகித்தால் மூளையில் புற்று நோய் ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.சுவீடன் நாட்டின் உரிஃப்ரோ நகரில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனை பேராசிரியர் லின்னார்ட் ஹார்டெல் மற்றும் உமியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் கிஜில் ஹான்சன் மில்ட் ஆகியோர் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது.இவர்களின் ஆராய்ச்சியில், 10 ஆண்டு தொடர்ந்து செல்போன் பயன்படுத்தும் நபர்களுக்கு, மூளை புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு மற்றவர்களை விட 2 மடங்கு அதிகம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.தினசரி ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக செல்போன் பயன்படுத்துபவர்கள், எந்த காதில் செல்போனை வைத்து பேசுகிறார்களோ, அப்பகுதி மூளையில் கட்டி ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.சிறு குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதால் மூளைப்புற்று நோய் வரும் ஆபத்து அதிகளவு இருக்கிறது என தங்கள் ஆய்வில் லின்னார்ட் மற்றும் கிஜில் தெரிவித்துள்ளனர்.

0 comments: