சிலம்பாட்டத்தில் "சின்ன ரம்பா...."சிம்பு வைத்த செல்லப் பெயராம்

அழியாத வரலாற்றுப் பக்கங்களில் இடம் பிடித்துவிட்டது ரம்பாவின் தொடை! இன்றளவும் இந்த வரலாறை மீற ஒரு நடிகைக்கும் சாமர்த்தியம் இல்லை.

ஆனால், சனாகானிடம் எதைக் கண்டாரோ? ‘சின்ன ரம்பா’ என்றே அழைக்கிறாராம் சிம்பு. அழைத்தால் போதுமா? அதை பதிவு செய்ய வேண்டாமா? சிலம்பாட்டம் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கும் சனாகானை மேலே சொன்ன ‘பட்ட பெயரோடு’ அழைத்து ஒரு பாடலே பாடியிருக்கிறாராம். ‘பம்பாய் இப்போ மும்பையானது. சின்ன ரம்பா இப்போ தெம்பாதான் திரியுது’ என்று தொடங்குகிறதாம் அந்த பாடல். தன்னை ரம்பா என்று அழைப்பதில் ரொம்பவே சந்தோஷப்படுகிறார் சனாகானும். ஒவ்வொரு படத்திலும் தனது அசோக் பில்லர் தொடைகளை காட்ட தயங்கியதே இல்லை ரம்பா. சனாகான் அப்படி ஏதாவது இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறாரா என்பதை சிலம்பாட்டம் வந்த பிறகுதான் முடிவு செய்யவேண்டும்.

சின்ன ரம்பாவுக்கு யூனிட் கொடுக்கும் முன்னுரிமை மற்றொரு நாயகியான சினேகாவுக்கு சின்ன கோபத்தை வரவழைத்திருக்கிறதாம். ஆனாலும், தனது முறை வரட்டும். நடிப்பாலேயே அடிக்கிறேன் என்று சபதம் செய்திருக்கிறாராம். இரண்டு பெண்கள் ஓரிடத்தில் இருந்தால், கலகலப்பும் உண்டு. கைகலப்பும் உண்டு!

தோல்வியில் துவண்ட ஹீரோ!

வெயில் படத்திற்குப் பிறகு பரத்துக்கு பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. படம் ஓரளவுக்கு வெற்றிதான் என்றாலும் பரத்தைவிட பசுபதிதான் அதிகம் பேசப்பட்டார். அதற்குப்பின் திருமுருகன் இயக்கிய எம் மகன் ஓரளவுக்கு ஓடியது. அதற்கடுத்து எந்தப் படமும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. கூடல் நகர், சென்னை காதல், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, தற்போது வெளியான சேவல் வரை வரிசையாக தோல்விப் படங்கள். அதனால் மனம் நொந்தவருக்கு தற்போது ஆறுதல் தரும் படமாகவும், நம்பிக்கை படமான ஆறுமுகத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

சுரேஷ் கிருஷ்ணா இயக்குவதால் மிகவும் தெம்புடன் இருக்கிறார். இருந்தாலும் காதல் படத்தை போல மிகப்பெரிய வெற்றிப்படம் கொடுக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளார். அதற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு ஒரு சில கதைகளை ஓ.கே. பண்ணி வைத்திருக்கிறார். ஆறுமுகம் படம் வெளியானவுடன் அந்தப் படத்தில் நடிக்கவுள்ளார். எப்படிப்பட்ட நடிகராக, இயக்குனராக இருந்தாலும் தற்போதைய ஹிட்தான் பேசப்படும் என்பதை தெளிவோடு புரிந்து வைத்துள்ளார் பரத்.

சிறுவர்களில் மூளைப் புற்றுநோயை தோற்றுவிக்கும் மரபணு அலகு கண்டுபிடிப்பு.

lankasri.comபிரித்தானிய கேம்பிரிஷ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சிறுவர்கள் மத்தியில் மூளையில் ஏற்படும் புற்றுநோய்க்கு அநேகம் காரணமாக விளங்கும் மரபணு அலகை (gene) கண்டறிந்துள்ளனர்.

இந்த மரபணு அலகானது மரபணு அலகுகளின் இணைவால் உருவாகும் ஒரு fusion gene என்று கண்டறியப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் இந்த மரபணு அலகின் தொழிற்பாட்டை நிரோதிப்பதன் மூலம் சிறுவர்கள் மத்தியில் மூளைப் புற்றுநோய் தோன்றுவதிலின்றும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பாதுகாப்பளிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இக்கண்டுபிடிப்பு இத்துறையில் சிறந்த முன்னுதாரணக் கண்டுபிடிப்பாகி இருப்பதோடு எதிர்கால ஆய்வுகள் பலவற்றுக்குமான உறுதியான ஆரம்ப அடித்தளத்தை இட்டிப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

"ஒரு கோடியே 5லட்சம் சதுர மைல்" வான மண்டலத்தில் விழுந்த பெரிய "ஓட்டை";பூமிக்கு ஆபத்தா?

lankasri.comஅமெரிக்காவில் உள்ள "நாசா" விண்வெளி ஆய்வு மையம் வான மண்டலத்தில் ஏற்பட்டுள்ள "ஓட்டை" குறித்து ஆய்வு செய்து வருகிறது."நாசா”வை சேர்ந்த விஞ்ஞானி பால் நியூமன் தலைமையிலான குழுவினரின் ஆராய்ச்சியில்,கடந்த ஆண்டு 97லட்சம் சதுர மைல் அளவுக்கு வானவெளியில் ஓட்டை ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது. இது பரப்பளவில் வடக்கு அமெரிக்காவுக்கு இணையானது ஆகும்.

இந்த வான மண்டல ஓட்டை மென் மேலும் அதிகரித்துக்கொண்டே வருவதாகவும் விஞ்ஞானிகளின் ஆய்வு கூறுகிறது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த ஓட்டை ஒரு கோடியே 5லட்சம் சதுர மைல் அளவுக்கு பெரிதாகி உள்ளதாக ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வான மண்டல ஓட்டையின் பரப்பளவு அதிகரித்துக்கொண்டே செல்வதால் "அல்ட்ரா" கதிர்கள் பூமியை தாக்கும் அபாயம் இருக்கிறதா? என்பது குறித்து நாசா விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

உண்மைத்தமிழனா அஜித்? உப்பிட்டவனை மறக்காதே...

"சினிமாவை சினிமாவோடு விட்டுவிடுங்கள்: அஜுத்" என்பதன் உள்கருத்து என்ன?

கடந்த சில நாட்களுக்கு முன் அஜுத் இந்த போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ளனும் என்று செய்தி வெளியிட்டதை அடுத்து புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கொந்தழிப்பின் பின் அஜுத் தான் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்று ஊடங்கங்களுக்கு விசேட கருத்தை தெரிவித்திருந்தார்.

வேண்டா வெறுப்பாகத்தான்(சுயநலத்துக்காக) இவர் இந்தப்போராட்டத்தில் கலந்து கொண்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. போராட்டம் என்பது உணர்வு சம்மந்தப்பட்டது. இவருக்குத்தான் தமிழன் என்ற உணர்வு கொஞ்சம்கூட இல்லை. கமெரா முன் நடிக்கத்தெரிந்த அவருக்கு நிஜவாழ்க்கையில் நடிக்கக்கூடத்தெரியவில்லை. மனமில்லாமல் வந்தவர் இந்த உண்ணாவிரதப் போரட்டத்தில் ஆற்றிய உரையில் ஈழத்தமிழர் பற்றிய எந்த ஒரு விடயத்தை கூட அவர் அங்கு குறிப்பிடவில்லை. மாறாக,"சினிமாவை சினிமாவோடு விட்டுவிடுங்கள்" என்று விசமதனமாக சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

அஜுத்தின் அந்த கருத்துக்கு தமிழ் சினிமா நடிகர் சங்க தலைவர் சரத்குமார் "நீங்கள் ஊட்டிவிட்டு வளந்தவர்கள் தான் நாங்கள், உங்களுக்காக போராட நாங்கள் காத்திருக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் அஜுத் இந்த போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ளனும் என்று செய்தி வெளியிட்டதை அடுத்து புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கொந்தழிப்பின் பின் அஜுத் தான் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்று ஊடங்கங்களுக்கு விசேட கருத்தை தெரிவித்திருந்தார்.

நன்றிகெட்ட ................!

இணையத்தள உபயோகம் மூளையின் செயல்திறனை ஊக்குவிக்கிறது அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்

lankasri.comஇணையத்தளங்களை உபயோகிப்பதானது நடுத்தர வயதுடையவர்களுக்கும் வயதானவர்களுக்கும் மூளையின் திறன் பலமடைய உதவுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தீர்மானமெடுத்தல், குழப்பநிலைகளுக்கான காரணத்தை பகுத்தாராய்தல் என்பனவற்றை கட்டுப்படுத்தும் மூளையின் மையங்கள், இணையத்தள தேடுதலின்போது ஒழுங்கமைக்கப்படுவதாக மேற்படி ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், வயதாதலுடன் தொடர்புடைய மனோவியல் மாற்றங்களை தடுக்கவும் இணையத்தள தேடுதல் உதவுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேற்படி ஆய்வின் முடிவுகள் அமெரிக்க மனோவியல் மருத்துவ வெளியீட்டில் இடம்பெற்றுள்ளன.

மூளை வயதாவதன் காரணமாக அதன் கலங்களின் செயற்பாடுகளிலான குறைபாடு உள்ளடங்கலான பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறுக்கெழுத்து புதிர்கள் போன்றவற்றின் மூலம் மூளையின் செயற்பாட்டு திறனை ஊக்குவிக்க முடியும் என முன்னர் கண்டறியப்பட்ட நிலையில், அதற்கு இணையத்தள பயன்பாடும் கணிசமான அளவில் உதவுவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஆய்வுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் காரி ஸ்மோல் விபரிக்கையில், ""இணையத்தள தேடலானது மூளையின் சிக்கல்மிகு செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக உள்ளது. இது மூளையின் தொழிற்பாட்டை விருத்தி செய்கிறது'' என்று கூறினார்.

விலங்கு இழையங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது முழுமையான செயற்கை இருதயம்!

http://www.medgadget.com/archives/img/131113.jpg

மனிதனின் சொந்த இருதயத்தையொத்த செயற்பாடுகளைக் கொண்ட செயற்கை இருதயமொன்றை பிரான்ஸ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.

இருதய இயக்கம் பாதிக்கப்பட்ட,இருதய மாற்று சிகிச்சையொன்று சாத்தியமற்ற நோயாளிகளுக்கு இந்த செயற்கை இருதயமானது வரப்பிரசாதமாக அமையும் என மேற்படி ஆய்வுக்குத் தலைமை தாங்கிய பிரான்ஸின் பிரபல இருதய சத்திர சிகிச்சை நிபுணரான மருத்துவ கலாநிதி அலெய்ன் கார்பென்ரியர் தெரிவித்தார்.

கடந்த 15வருடகால ஆராய்ச்சியின் பயனாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை இருதயம் தொடர்பாக விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் மாநாடு பாரிஸில் இடம்பெற்றது."உயிரியல் இரசாயன இழையங்களைப் பயன்படுத்தி முழுமையான செயற்கை இருதயம் உருவாக்கப்படுவது உலகில் இதுவே முதற்றடவையாகும்"என மேற்படி இருதயத்தை உருவாக்கியுள்ள உயிரியல் மருத்துவக் கம்பனியான "கார்மட்"இன் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் பற்றிக் கொலம்பியர் தெரிவித்தார்.

"இந்த உயிரியல் இரசாயன இழையங்களானது விலங்குகளின் இழையங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டமையால் அவற்றை மனித உடல் நிராகரிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவுள்ளது"என அவர் கூறினார்.கார்மட் நிறுவனமானது,பொது மற்றும் இராணுவ பாவனைக்கான விமானங்கள்,எறிகணைகள்,விண்கலங்கள் என்பனவற்றை உருவாக்கி சந்தைப்படுத்தி வரும் விண்வெளி மற்றும் விமானப் பாதுகாப்பு கம்பனியால் ஸ்தாபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேலும் 15புதிய செயற்கை இருதயங்களை உருவாக்க கம்பனி திட்டமிட்டுள்ளது.இந்த இருதயங்களை எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் மனிதர்களுக்கு பொருத்தும் பரீட்சார்த்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.1980களிலிருந்து செயற்கை இருதயங்களை உருவாக்குவதற்கான அநேகஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன.அவற்றில் அநேகமானவை இருதய மாற்று அறுவைச் சிகிச்சை வரை நோயாளியின் உயிரை தக்க வைப்பதற்கு உபயோகிக்கப்பட்டன.

எனினும்,அவை எதுவுமே நீண்டகால அடிப்படையில் மாற்று இருதயமாக இயங்கும் வல்லமையைக் கொண்டிருக்கவில்லை.அந்த செயற்கை இருதயங்களைப் பொருத்துவதால் ஏற்படும் ஒவ்வாமை எதிர் விளைவுகள் மற்றும் குருதி உறைதல் போன்ற பிரச்சினைகள் காரணமாகவே அவற்றினை நோயாளிக்கு நிரந்தரமாக உபயோகிப்பது சாத்தியமற்று இருந்தது.ஆனால்,இப்புதிய மிருக இழையங்களால் உருவாக்கப்பட்ட செயற்கை இருதயமானது குருதி உறையும் அபாயம் குறைந்தது என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.