கப்ஸ் லொக்(Capslock) கீயை அழுத்தும்போது ஒலி ஏற்படுத்தும் செயற்பாடு !

எம்மில் பலர் கீபோர்டில்(Key board) ரைப்செய்யும்போது தவறுதலாக கப்ஸ் லொக்(Capslock) கீயை அழுத்திவிடுவார்கள். ஆதன்பின்னர் ரைப்செய்யும் எழுத்துக்கள் பெரிய(Capital) எழுத்துக்களாக திரையில் தெரியும். இந்த சிக்கலுக்கு விண்டோஸில் ஒரு தீர்வு உள்ளது. அதாவது கப்ஸ் லொக்(Capslock)கீயை அழுத்தும்போது ஒரு ஒலி கேட்கும். எவ்வாறு செயற்படுத்துவது?
கன்ட்ரோல் பனலுக்கு செல்லவும்.(Start>setting>control panal) Accessibility option என்ற ஐக்கனை (Double Click) செய்யவும். அப்பொழுது தோன்றும் விண்டோஸின் கீழ்பகுதியில்; Use Toggle Keys என்பதன் இடதுபுறமுள்ள செக்பொக்சில் டிக்(Click) செய்து பின்னர் Apply யை click செய்து பின்னர் ok யை click செய்யவும். தற்பொழுது கப்ஸ் லொக்(Capslock) கீயை அழுத்தும்போது கப்ஸ் லொக்(Capslock) on ஆகும்வேளையில் பீப்(Beep) என்ற ஒலியும் off ஆகும்வேளையில் மற்றொரு வித ஒலியும் கேட்கும். இந்த ஒலி num lock,scroll lock ஆகிய கீகளை (on/off)செய்யும்போதும் கேட்கும்.