நாள்தோறும் ஓட்டப் பயிற்சி; இளமையை பாதுகாக்கும்- ஆய்வில் தகவல்!

நாள்தோறும் ஓட்டப் பயிற்சி மேற்கொள்வதால் இளமை பாதுகாக்கப்டுவதாகவும், மூப்பின் செயல்பாடுகள் மெதுவாக இருக்குமென்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நியூயார்க்கில் இருந்து வெளியாகும் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியாகி உள்ள ஆய்வு முடிவின் செய்தியில் கூறியிருப்பது:

20 ஆண்டுகளாக நாள்தோறும் தவறாமல் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் (தற்போது 70 வயதாகும்) 500-க்கும் மேற்பட்டவர்களிடம் ஸ்டேண்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

ஆய்வின் முதல் கட்டத்தில் வாரம் ஒன்றுக்கு 4 மணி நேரம் இவர்கள் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு படிபடியாக குறைந்து வாரம் 76 நிமிடங்கள் என்ற அளவுக்கு குறைந்துவிட்டது. இருப்பினும், அவர்கள் ஓட்டப் பயிற்சியுடன், இதர பயிற்சிகளையும் மேற்கொண்டனர்.

புத்துணர்ச்சியுடன்... ஓட்டப் பயிற்சி, இதரப் பயிற்சிகள் மேற்கொண்டதால் தற்போது 70 வயதாகும் அவர்கள் இளமையுடன் தான் உள்ளார்கள். அவர்களின் மன, உடல் வலிமையும் வலுபெற்றுள்ளன. புத்துணர்ச்சியுடன் அவர்கள் தங்களின் அன்றாடப் பணிகளை தாங்களே செய்துகொள்கின்றனர். இவர்களுடன் 19 ஆண்டுகளுக்கு முன் பயிற்சியில் ஈடுபட்டு ஓட்டப் பயிற்சியை நிறுத்தியவர்களில் 34 சதவீதம் பேர் இடையிலேயே இறந்துவிட்டனர். ஓட்டப் பயிற்சி செய்தவர்களின் சிறுவயது இறப்பு சதவீதம் குறைவாக உள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.

ஓட்டப் பயிற்சியை வழக்கமாக மேற்கொள்பவர்களுக்கு இதய நோய் உள்ளிட்ட பலவித நோய்களின் தாக்கமும் குறைவுதான். இதில் ஒரு சிலரே புற்றுநோய், நரம்பியல் நோய் போன்ற நோய்களின் பாதிப்பால் சிறுவயதில் இறக்க நேரிடுவதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments: