உலகிலேயே சிறிய பாம்பினம் கண்டுபிடிப்பு. !

கரிபியன் தீவுகளில் ஒன்றான பார்படோசில் (Barbados) இல் அழிவின் விளிம்பில் உள்ள சிறிய காட்டுப்பகுதியில், பாறைகளுக்கு கீழே வாழ்ந்து வருகின்ற சுமார் 10cm நீளமுள்ள பாம்பை விலங்கியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தப் பாம்பு கறையான்களை உணவாக்கி வாழ்ந்து வருகிறது. முழுதும் வளர்ந்த பெண் பாம்பு ஒப்பீட்டளவில் ஒரே ஒரு பெரிய முட்டையை இடுகிறது. அது பொரிக்கும் போது முழு வளர்ச்சியடைந்த பாம்பின் மொத்த நீளத்தில் கிட்டத்தட்ட அரைவாசி நீளமுள்ள குஞ்சை/குட்டியை உருவாக்குகிறது.

இந்தப் பாம்பு Leptotyphlops carlae என்ற இரு சொற்பெயரீட்டைக் கொண்டு அழைக்கப்படுகிறது. உலகில் அறியப்பட்டுள்ள 3,100 பாம்பினங்களுள் பருமனில் மிகச் சிறியது இதுவாகும்.

வழமையான பெரிய பாம்புகள் இடும் முட்டையில் இருந்து பொரிக்கும் குஞ்சுகளுக்கும் கண்டுபிடிக்கப்பட்ட சிறிய இனப்பாம்பின் முட்டையில் இருந்து பொரிக்கும் குஞ்சுக்கும் இடையில் அவற்றின் தாய்ப் பாம்புகளுடனான (முழு வளர்ச்சி கண்ட பாம்புடனான) நீளத்துடன் அமைந்த ஒப்பீடு.

மரபணு அடிப்படையில் இந்தச் சிறிய பாம்புகள் பெரிய பாம்பில் இருந்து வேறுபாட்டைக் காண்பிக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான மிகச் சிறிய இனப் பாம்புகளை அவதானிப்பது மிகக் கடினமாக இருந்து வந்துள்ள நிலையில் இக்கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.

0 comments: