மகிழ்ச்சியான பெண்களுக்கு மார்பக புற்று நோய் வராது!

இளம்பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுவது பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது.நவீன வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கம் ஆகியவையும் இதற்கு ஒரு காரணம்.

இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த சில டாக்டர்கள் நடத்திய ஆய்வில் சந்தோஷமான வாழ்க்கை நடத்தும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

எப்போதும் மகிழ்ச்சியாகவும், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளும் உள்ள பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்பட வழி இல்லை என்கிறார்கள். அந்த டாக்டர்கள் 450 பெண்க ளிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவலை தெரி வித்துள்ளனர்.

இதே போல தூங்கும் போது கனவு காண்பது உடல் நலத்துக்கும் மனதுக்கும் நல்லது என்கிறார்கள் டாக்டர்கள். அடிக்கடி கனவு காண்பது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதுடன் சிக்கலான பிரச்சினைகளை திறமையாக சமாளிக்கும் சக்தியை கொடுக்கிறது என்றும் கூறினார்கள்.

0 comments: