பொருள்களை பார்வையிலிருந்து மறையச் செய்யும் தொழில்நுட்பம்: விஞ்ஞானிகள் தீவிரம்!

நம் நாட்டில் மந்திரவாதிகள், தந்திரவாதிகள் செய்யும் கண்கட்டி வித்தையைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இது எந்தளவு உண்மை என்பது தெரியாது. ஆனால் இந்தக் கண்கட்டி வித்தையை அறிவியல் பூர்வமாகச் செய்ய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அந்த ஆராய்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது.

இந்த ஆராய்ச்சியில் பொருள்களை அல்லது மனிதர்களை கண் பார்வையிலிருந்து மறையச் செய்யும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அதை நடைமுறைப்படுத்தும் இறுதிக்கட்ட ஆய்வில் விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

ஒரு பொருள் அல்லது மனிதனைச் சுற்றியுள்ள ஒளிக்கதிர்களை விலகிச் செல்ல செய்வதன் மூலம் அந்தப் பொருளை அல்லது அந்த மனிதனை கண் பார்வையிலிருந்து மறையச் செய்ய முடியும். அதாவது ஆற்றின் நடுவே இருக்கும் பாறையிலிருந்து தண்ணீர் விலகிச் செல்வது போல ஒளிக்கதிர்களை அந்த பிம்பத்திலிருந்து விலகச் செய்ய முடியும் என்று தி சண்டே டைம்ஸ்' பத்திரிகையில் மூத்த விஞ்ஞானி சியாங் சாங் கூறியுள்ளார்.

இவ்வாறு செய்யும்போது கண் பார்வையிலிருந்து அந்த பொருளை முற்றிலுமாக மறைத்துவிடலாம்.

இதுபோன்று ஒரு பெரிய கப்பலையோ அல்லது டாங்கியையோ மறையச் செய்வதன் மூலம் போரில் இந்த தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

பொருள்களை கண் பார்வையிலிருந்து மறையச் செய்யும் தொழில்நுட்பம் இன்னும் ஆராய்ச்சி நிலையில்தான் உள்ளது. விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 comments:

said...

அறிவியலின் இத்தகு கண்டுபிடிப்புகள் எதிர்காலத்தில் ஆன்மீகம் குறித்து தெளிவாக எளிமையாக புறிந்துகொள்ள வழிவகுக்கும். தொடர்ந்து அறிவியல் செய்திகளை தமிழில் தாருங்கள். Word Verification எடுத்துவிடுங்கள். எளிதில் பின்னூட்டம் எழுத தடையாக இருக்கிறது. நன்றி.