டோனி மீண்டும் "நம்பர் ஒன்"! இது நிரந்தரமானதா?


இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணியின் கேப்டன் டோனியின் பேட்டிங் மிகச்சிறப்பாக இருந்து வருகிறது. இலங்கையுடன் 3-வது மற்றும் 4-வது ஒரு நாள் ஆட்டங்களில் முறையே 76, 71 ரன்களை குவித்தார்.

இந்த சிறப்பான ஆட்டத்தினால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஒரு நாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த டோனி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

நேற்று வெளியிடப்பட்ட புதிய தரவரிசையில் டோனி 803 புள்ளிகளுடன் முதலிட அரியணையில் ஏறி இருக்கிறார். இதற்கு முன்பாக 2006-ம் ஆண்டு குறுகிய காலம் டோனி முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தென்ஆப்பிரிக்க கேப்டன் சுமித் 2-வது இடத்திலும் (776 புள்ளிகள்), ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கிபாண்டிங் 3-வது இடத்திலும் (751 புள்ளிகள்), மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹஸ்ஸி (750 புள்ளிகள்) 4-வது இடத்திலும், இங்கிலாந்து கேப்டன் பீட்டர்சன் 5-வது இடத்திலும் (744 புள்ளிகள்) உள்ளனர். இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கர் 728 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் நீடிக்கிறார். அதே சமயம் அவுட் ஆப் பார்மில் உள்ள யுவராஜ்சிங் 678 புள்ளிகளுடன் 18-வது இடத்தில் பின்தங்கியுள்ளார்.

ஒரு நாள் போட்டி பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 20 இடங்களில் இந்தியா சார்பில் ஜாகீர்கான் மட்டுமே இடம்பெற்றுள்ளார். அவர் 642 புள்ளிகளுடன் 14-வது இடம் வகிக்கிறார்.

0 comments: